25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஜெர்மனியுடன் பலப்பரீட்சை: இந்திய பெண்கள் ஹாக்கி அணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜெர்மனியுடன் பலப்பரீட்சை: இந்திய பெண்கள் ஹாக்கி அணி.

பெண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 5-6வது இடத்துக்கான போட்டியில் இன்று ஜெர்மனியை எதிர்கொள்கிறது.

லீக் சுற்றில் 2வது இடம் பிடித்த இந்தியா, அரையிறுதிக்கு முந்தைய 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது. ‘இ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

அடுத்ததாக ஆஸ்திரேலியாவை கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் களமிறங்கிய இந்திய அணி, கோல் எதுவும் அடிக்காமல் ஆட்டத்தை ‘டிரா’ செய்தது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில், 5-6வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, ‘எப்’ பிரிவில் 3வது இடம் பிடித்த ஜெர்மனியுடன் மோதுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News