25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் டிரா செய்தார் குகேஷ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் டிரா செய்தார் குகேஷ்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் நடப்பு உலக சாம்பியன் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் சிந்தாரோவுடன் டிரா செய்தார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) சார்பில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கியது. இதில் இந்தியாவின் குகேஷ் மற்றும் உஸ்பெகிஸ்தானின் சிந்தாரோவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

மொத்தம் 14 சுற்றுகளைக் கொண்ட கிளாசிக்கல் முறையிலான இப்போட்டியில் முதலில் 7.5 புள்ளிகளைப் பெறும் வீரர் சாம்பியன் பட்டத்தை வெல்வார்.

முதல் சுற்றில் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடிய குகேஷ், சிந்தாரோவின் ஆட்டத்தைத் திறம்பட எதிர்கொண்டார். இருவருக்கும் இடையிலான ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாகவும் சமநிலையிலும் நீடித்தது.

இறுதியில் 38-வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் இருவரும் தலா 0.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News