25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மூலம் சமூக, பொருளாதார தகவல்கள் குறித்து 81-ஆவது தேசிய மாதிரி ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மூலம் சமூக, பொருளாதார தகவல்கள் குறித்து 81-ஆவது தேசிய மாதிரி ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மூலம் 81-ஆவது தேசிய மாதிரி பொதுமக்களின் இடம்பெயர்வு ஆய்வு (Migration survey), அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வு, குடும்பங்களின் நிலம்,கால்நடை உடைமை மற்றும் கிராமப்புற வேளாண்குடும்பங்களின் நிலை குறித்த மதிப்பீடு ஆய்வானது  3 நிலைகளாக மேற்கொள்ளப்படவுள்ளது. 

இந்த ஆய்வில், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், கல்வி, வேலைவாய்ப்பு, இடம் பெயரலுக்கான காரணங்கள், கடன் மற்றும் முதலீட்டு விவரங்கள், வரவு, செலவு விவரங்கள், நிலம் மற்றும் கால்நடை தகவல், வேளாண் நடவடிக்கைகள் உள்ளிட்ட சமூக மற்றும் பொருளாதார தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளது. 

இடம் பெயர்வு குறித்து பாம்பாட்டி, துலுக்கன்குறிச்சி, தெற்கு வெங்காநல்லூர், திருச்சுழி, ஆயர் தர்மம், மேல கல்லான்குளம், சம்மந்தபுரம், தாயில்பட்டி, தொப்பலாக்கரை, வடபட்டி, பூலாங்கல், மாரனேரி, சொக்கம்பட்டி, குரன்டி, செவல்பட்டி, மேலராஜகுலராமன் (பகுதி), குறிஞ்சாகுளம், முத்தனேந்தல் ஆகிய 18 கிராம ஊராட்சிகளிலும், சிவகாசி(3 மாதிரிகள்), திருத்தங்கல், அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர் (2 மாதிரிகள்), சம்மசிகாபுரம், எஸ்.கொடிக்குளம், சித்துராஜபுரம், கூரைக்குண்டு, இராஜபாளையம், விருதுநகர், மம்சாபுரம் (2 மாதிரிகள்) ஆகிய 16 நகர்ப்புற பகுதிகளில் தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.

அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வு மற்றும் குடும்பங்களின் நிலம், கால்நடை உடைமை மற்றும் கிராமப்புற வேளாண் குடும்பங்களின் நிலை குறித்து மானங்காத்தான், நல்லூர், மீசலூர், புதுக்கோட்டை, சம்மந்தபுரம், சொக்கனாதபுத்தூர், தில்லாகுளம், காளையார்குறிச்சி, பெரியகொள்ளபட்டி, அப்பனாயக்கன்பட்டி, தெற்கு வேங்கநல்லூர், திருச்சுழி, ஆலங்குளம், ஆதிகுளம் ஆகிய 14 கிராமப்புற மாதிரிகளிலும், சுந்தரபாண்டியம், திருத்தங்கல், சேத்தூர், மம்சாபுரம், இராஜபாளையம், விருதுநகர், எஸ்.கொடிகுளம், கூரைக்குண்டு, வாடி, காரியாபட்டி, விஸ்வநத்தம், காரியாபட்டி ஆகிய 12 நகர்புற மாதிரிகளிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

ஆய்விற்காக அலுவலர்கள் பொதுமக்களின் இல்லங்களுக்கு வரும் பொழுது உண்மையான புள்ளி விவரங்களை அளித்திட வேண்டும். மக்களால் தெரிவிக்கப்படும் புள்ளி விவரங்கள் பாதுகாக்கப்படும். இதன் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களின் மூலம்  மத்திய, மாநில அரசுகளால் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்த உதவும். இப்பணிக்கு  பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News