25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


அரசினர் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசினர் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான நேரடி பயிற்சியாளர் சேர்க்கை 15.06.2026 முதல் நடைபெற்று வருகிறது.  எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டாதாரிகளும் சேரலாம்.  வயது வரம்பு 14 முதல் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.  பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.
நேரடியாக விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு உரிய ஆவணங்களான அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்று, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றுடன் சென்று சேர்ந்து கொள்ளலாம்.


பொருத்துநர் (FITTER), கடைசலர் (TURNER), இயந்திர வேலையாள் (MECHINIST), கம்மியர் மோட்டார் வாகனம் (MMV), குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுபடுத்தும் தொழில் நுட்பவியலாளர் (REGRIDGERATION AND AIR CONDITIONING TECHNICIAN), கம்பியாள், பற்றவைப்பவர் (WELDER), உட்புற வடிவமைத்தல் மற்றும் அலங்கரித்தல் (INTERIOR DESIGN AND DECORATION), தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை (FIRE TECHNOLOGY AND INDUSTRIAL SAFETY), மேம்படுத்தப்பட்ட CNC இயந்திர தொழில் கம்மியர் மின்சார வாகனம் (CNC), தொழில்துறை எந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவியலாளர், கம்மியர் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டு, மின்சார பணியாளர் (ELECTRICIAN), மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேசன், நில அளவையர் (SURVEYOR), கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் போன்ற தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள், தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News