ஆசிய ஜிம்னாஸ்டிக்சில் வரலாறு: தங்கம் வென்றார் அரிஹா!
பிலிப்பைன்சில் ஆசிய ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அரிஹா வீராங்கனை பங்கேற்றார்.
முதலில் நடைபெற்ற ‘ஆர்டிஸ்டிக்’ பிரிவில் அரிஹா 8.650 புள்ளிகளும், அடுத்து நடைபெற்ற ‘எக்ஸிகியூஷன்’ பிரிவில் 7.600 புள்ளிகளும் பெற்றார். ‘டிஃபிகல்ட்டி’ பிரிவில் 2.850 புள்ளிகள் பெற்றார்.
ஒட்டுமொத்தமாக 19.100 புள்ளிகள் பெற்ற அரிஹா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஆசிய ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சீனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றையும் அரிஹா படைத்தார்.
0
Leave a Reply