25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் 25 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மதுரைக்கு   கல்வி சுற்றுலா செல்லும் வாகனத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் 25 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், (28.03.2025) மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் 25 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மதுரைக்கு   கல்வி சுற்றுலா செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,IA S., அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு  சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக  (28.03.2025) மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் மதுரை சுற்றுச்சூழல் பூங்கா, திருமலை நாயக்கர் மஹால், இராஜாஜி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு அறிவியல் களப்பயணம் செல்வதற்கு மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுற்றுலா பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பயணத்தில், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள 3.5 இலட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள், குழந்தைகள் நூல், சிறுவர் திரையரங்கம், கலையரங்கம், மாதிரி வானூர்தி, எண்ணிம திரைகள், தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் , போட்டித் தேர்வுகளுக்கான நூலகப்பகுதி, பார்வையற்றவர்களுக்கான நூல்கள் மின்னூல்,ஒலி நூல், மேற்கோள் நூல்கள் குறித்தும், மதுரை சுற்றுச்சூழல் பூங்காவில் திருமலை நாயக்கர் மஹால், இராஜாஜி பூங்கா உள்ளிட்டவைகளையும் பார்வையிட்டு, அவற்றையெல்லாம் மாணவர்கள் அறிந்து கொண்டு, அவர்களுக்கு ஒரு தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும் இந்த அறிவியல் களப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.இந்நிகழ்வின் போது, ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News