25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் நடத்தும் மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாமானது விருதுநகரில் உள்ள  அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்  வரும் 20.07.2026 திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் விருதுநகர் மாவட்டம் மற்றும் வெளி மாவட்ட முன்னணி நிறுவனங்கள் நேரடியாக தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை நடத்தயிருப்பதால் இந்த சேர்க்கை முகாமில் அவசியம் கலந்து கொண்டு நீங்கள் விரும்பும் நிறுவனத்தில் சேர்ந்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் National Apprenticeship Certificate (NAC) பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முகாமில் அரசு/தனியார் ஐடிஐ-யில் பயின்றவர்கள் மற்றும் NCVT, SCVT மற்றும் COE  முறையில் அரசு/தனியார் ஐடிஐ-யில் பயின்றவர்களும் கலந்து கொள்ளலாம்.  

மேலும், ஐடிஐ சான்று இல்லாத 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு, பாலிடெகனிக், பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் Fresher Apprentice ஆக நேரடியாக தொழிற்சாலைகளில் சேர்ந்து பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும்  பயிற்சியின் போது உரிய உதவித்தொகையும் வழங்கப்படும்.

NAC சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது. எனவே, உரிய கல்வி சான்றிதழ்களுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S.,அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News