வளரிளம் பெண்களின் இரத்தச்சோகை குறைப்பாட்டை தடுக்கும் நோக்கில், இரும்புக் கண்மணிகள் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் (29.04.2025) மாவட்ட நிர்வாகம், பிரதான் இண்டஸ் இண்ட் மாவட்ட வளர்ச்சி திட்டம் மற்றும் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இணைந்து, வளரிளம் பெண்களின் இரத்தச்சோகை குறைப்பாட்டை தடுக்கும் நோக்கில், இரும்புக் கண்மணிகள் திட்டத்தின் கீழ், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ள வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்குதல், சுகாதார விழிப்புணர்வு மற்றும் நலம் சார்ந்த பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் இணைய வழியாக தொடங்கி வைத்து, உரையாற்றினார்.
விருதுநகர் மாவட்டத்தில் ரத்தசோகையை ஒழிக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பிரதான் இண்டஸ் இண்ட் மாவட்ட வளர்ச்சி திட்டம் இணைந்து செயல்படுத்தும் இரும்புக் கண்மணிகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இரத்த சோகையற்ற இளைய தலைமுறையை உருவாக்குவோம் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.இந்த திட்டத்தின் கீழ் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, சிவகாசி, திருவில்லிபுத்தூர் மற்றும் வத்ராயிருப்பு ஆகிய வட்டாரங்களில் ஹீமோகுளோபின் அளவு 10.9 க்கு கீழ் உள்ள 1000 வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த வளரிளம் பெண்களுக்கான ரத்தசோகை ஊட்டச்சத்து பெட்டகத்தில், விட்டமின்-சி மாத்திரை, இரும்புச்சத்து டானிக், புரோட்டின் பவுடர் உள்ளிட்ட முக்கியமான உணவுப் பொருட்கள் அடங்குகின்றன. இந்த ஊட்டச்சத்து பெட்டகம், பெண்களின் இரத்தச் சோகை குறைபாட்டை தடுக்கும் நோக்கத்துடன் வழங்கப்படுகிறது.
பின்னர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ள வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கிடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கி தொடங்கி வைத்தார்.மேலும், வளரிளம் பெண்களின் இரத்தச்சோகை குறைப்பாட்டை தடுக்கும் நோக்கில், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ள வளரிளம் பெண்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கிடும் வகையில், ஹீமோகுளோபினோ மீட்டர் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கினார்.
0
Leave a Reply