25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் “Know Your Booth” விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் “Know Your Booth” விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள  வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 1901 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, தற்போது 98 வாக்குச்சாவடிகள் அதிகரித்து மொத்தம் 1999 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளது. அதில் 88 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்கனவே உள்ள அமைவிடத்திலும், 10 வாக்குச்சாவடிகள் புதிய அமைவிடங்களிலும் உள்ளன.

எனவே, இந்த கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், தங்களுக்கான வாக்குச்சாவடி மையத்தை தெரிந்து கொள்ளவும் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் “Know Your Booth” என்ற தலைப்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News