மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அருப்புக்கோட்டை நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (24.11.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மழைக்காலம் மற்றும் காலநிலை மாற்றங்களினால் டெங்கு கொசு உற்பத்தி அதிகமடைந்து டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனைத்தடுத்திடும் வகையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து உடனடியாக அகற்றுதல், வீடு மற்றும் பொது இடங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றுதல், குடிநீர் தொட்டிகளை மூடி வைத்தல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையை உறுதி செய்தல் வேண்டும்.
மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் தீவிர காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகள், தேவையான இடங்களில் புகைமருந்து தெளித்தல் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து துறைகளும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொசுப்புழு உற்பத்தி ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு தேடி வரும் போது அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, நகராட்சி ஆணையாளர்(பொ) திரு.விஜயகுமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மகேந்திரன், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply