25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெம்பக்கோட்டை பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  ஆய்வு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெம்பக்கோட்டை பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு .

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (14.07.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தாயில்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,  மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், செவல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலைக்கடை, கனிமவள நிதியின் கீழ் ரூ.38.44 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம், லட்சுமியாபுரம் ஊராட்சியில் பெருமளவு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணிகள், ராமுதேவன்பட்டியில் நபார்டு  நிதியின் கீழ் ரூ.92.84 இலட்சம் மதிப்பில் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமானதாகவும், சுவையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரமான சிகிச்சைகள் வழங்கியும், இரத்தசோகை உள்ள பெண்களை கண்டறிந்து அவர்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் மருந்துகள் வழங்குவதோடு அது குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும் எனவும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவதோடு வயதுக்கேற்ற உயரம், எடை குறித்த பதிவேடுகளை முறையாக கையாள வேண்டும் எனவும்,அனைத்து பகுதிகளுக்கும் குடிநீரை தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும் எனவும், அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க வேண்டும் எனவும்,இ-சேவை மையங்கள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை உரிய காலக் கெடுவுக்குள் பரிசீலித்து, சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கிட வேண்டும் எனவும், கணினி பட்டா திருத்தம் தொடர்பான கோரிக்கை மனுக்களை விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், மேலும், இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக சென்றடைவதை தொடர்புடைய அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இவ்வாய்வின் போது சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News