விற்பனை மையங்கள் அமைத்து மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் தேங்காய்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் தென்னையிலிருந்து பெறப்படும் தேங்காய் மற்றும் கொப்பரை ஆகியவை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் விற்பனை மையங்கள் அமைத்து மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் தேங்காய்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது, தென்னையிலிருந்து பெறப்படும் தேங்காய் மற்றும் கொப்பரை ஆகியவை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் தென்னை விவசாயிகளிடமிருந்து மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய்களை கட்டுபடியாகும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் வகையில் சேத்தூர் பகுதியில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும், மம்சாபுரம் பகுதியில் புதன் கிழமையும் மற்றும் வத்திராயிருப்பு பகுதியில் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தேங்காய்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.
தேங்காய்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல் வங்கி கணக்கு எண் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை விற்பனை மையத்திற்கு எடுத்து வந்தால் போதுமானது. அடங்கல் தேவையில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply