25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சி: தண்ணீருக்காக தவிக்கும் வனவிலங்குகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சி: தண்ணீருக்காக தவிக்கும் வனவிலங்குகள்.

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடமாக திகழ்கிறது. அரிய வகை பட்டாம்பூச்சிகளும் இப்பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றன.

தற்போது மாவட்டத்தில் கோடை வெயில் தீவிரமடைந்து, மழையின்மை நீடிப்பதால் மலைப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இயற்கை நீரோடைகள் மற்றும் குட்டைகள் வறண்டு போனதால், குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் அடிவார விவசாய நிலங்கள் மற்றும் தோப்புகளுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன.

இந்த சூழலை பயன்படுத்தி சில வேட்டையாடுபவர்கள் கண்ணி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் விலங்குகள் வாகன விபத்துகள் மற்றும் மின்வேலிகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

எனவே, வனப்பகுதிகளில் உள்ள இயற்கை குட்டைகள் மற்றும் செயற்கை நீர்த் தொட்டிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்புதல், வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர்கள் எதிர் பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News