நீண்ட நேரம் AC-யில் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க பலரும் ஏர் கண்டிஷனர் (AC) மற்றும் மின்விசிறியை நீண்ட நேரம் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. ஆனால், இடைவிடாமல் குளிர்சாதன அறையில் இருப்பது உடல்நலத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நீண்ட நேரம் AC-யில் இருப்பதால் உடல் சோர்வு, மூட்டுவலி அல்லது வீக்கம், கண் வறட்சி, தோல் உலர்தல், மூக்கடைப்பு, காது அடைப்பு போன்ற பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படலாம். எனவே, அவ்வப்போது இயற்கை காற்றை சுவாசிப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் AC வெப்பநிலையை அளவோடு வைத்துப் பயன்படுத்துவது உடல்நலத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
0
Leave a Reply