பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ராபிபருவத்தில், வேளாண் பயிர்களுக்கு உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தல்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016 - ம் ஆண்டுமுதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2025-26) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.ராபி பருவத்தில் (அக்டோபர் முதல்) பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள்/தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ (அ) பொதுசேவைமையங்கள் (Common Service Centres(CSC)) மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு சம்பா-நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.491/- எனவும், மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.319/- எனவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.136/- எனவும், கம்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.160/- எனவும், பாசி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.251/- எனவும், உளுந்து, துவரை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.252/- எனவும், பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.473/- எனவும், நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.314/- எனவும், எள் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.122/- எனவும் மற்றும் சூரியகாந்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.188/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் கடைசிநேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் கொத்தமல்லி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.583/- எனவும், மிளகாய் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1109/- எனவும், வெங்காயம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1573/- எனவும், வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.4426/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ம் ஆண்டின், நடப்பு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு 15.11.2025 அன்றும், மக்காச்சோளம், கம்பு, துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு 30.11.2025 அன்றும், சம்பா-நெல் மற்றும் சோளம் பயிருக்கு 16.12.2025 அன்றும், நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு 30.12.2025 அன்றும் மற்றும் எள் பயிருக்கு 31.01.2026 அன்றும் கடைசி நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களுக்கு, பயிர் காப்பீடு பதிவு செய்ய கொத்தமல்லி பயிருக்கு 17.01.2026 அன்றும், மிளகாய், வெங்காயம் பயிருக்கு 31.01.2026 அன்றும் மற்றும் வாழை பயிர்களுக்கு 28.02.2026 அன்றும் கடைசி நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass Book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதினையும் பொதுச் சேவை மையங்கள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கைபேரிடர்களையும், பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீட்டை (Crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC), தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி, தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply