25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விருதுநகரில் 7 நடமாடும் மின்னணு விழிப்புணர்வு  வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விருதுநகரில் 7 நடமாடும் மின்னணு விழிப்புணர்வு வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை 100% நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் SVEEP (Systematic Voters' Education and Electoral Participation) திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒன்று வீதம், அதிநவீன LED திரைகளுடன் கூடிய 7 மின்னணு விழிப்புணர்வு வாகனங்களின் சேவையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S.,அவர்கள்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகனங்கள் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) மற்றும் ராஜபாளையம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

 மின்னணு திரை மூலம் தகவல்கள்: வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள LED திரைகள் மூலம் வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கம், சரியான முறையில் வாக்களிக்கும் முறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலிகளான cVIGIL, 1950 உதவி எண் குறித்த குறும்படங்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் ஒளிபரப்பப்படும்.

சின்னம் 'விரு': விழிப்புணர்வு விளம்பரங்களில் 'விரு' (Viru) என்ற அணில் உருவம் கொண்ட சின்னம் வாக்காளர்களைக் கவரும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மாவட்டத்தின் தனித்துவமான அடையாளமாக முன்னிறுத்தப்பட்டுள்ளது.

*வாக்குப்பதிவு நாள் - ஏப்ரல் 23: வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், "எங்கள் வாக்கு - எங்கள் குரல்" (Our Vote - Our Voice) என்ற முழக்கத்தோடு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே இந்த வாகனப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

 இந்நிகழ்வின் போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், "ஜனநாயகத் திருவிழாவில் ஒவ்வொரு வாக்காளரின் பங்கேற்பும் மிக முக்கியமானது. எவ்வித ஆசை வார்த்தைகளுக்கும் இடமளிக்காமல், நேர்மையான முறையில் வாக்களித்து 100% வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்ட விருதுநகர் மாவட்ட மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News