25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சிவகாசி சட்டமன்றத் தொகுதி கட்டசின்னம்பட்டி கிராமத்தில் புதிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி சட்டமன்றத் தொகுதி கட்டசின்னம்பட்டி கிராமத்தில் புதிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டசின்னம்பட்டி கிராமத்தில் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகளைப் பிரித்து, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  (21.02.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் நோக்கில், அதிகப்படியான வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கட்டசின்னம்பட்டி கிராமத்தில் ஒரே வாக்குச்சாவடியில் 1,200-க்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்ததைக் கருத்தில் கொண்டு, அதனைப் பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று நடைபெற்ற இந்த ஆய்வின் போது, புதிய வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பறை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இருக்கின்றனவா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்தார்.

வாக்குச்சாவடி மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்குத் தயாராக இருக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆய்வின் போது, சிவகாசி வட்டாட்சியர் மற்றும் தேர்தல் பிரிவு அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News