25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு, கட்டுப்படுத்தும் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு, கட்டுப்படுத்தும் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு, கட்டுப்படுத்தும் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (30.09.2025)  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்திடவும், காய்ச்சல் கண்டறியப்படும் பகுதிகளில் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள் வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் பாலவநத்தம் ஊராட்சியில் டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

 இதில், வாரத்திற்கு ஒருமுறை “தேடுதல் – அகற்றுதல் – அழித்தல்” என்ற முறையில் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை ஆய்வு செய்து, தேவையற்ற தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்றுதல், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப்புகள், பாட்டில்கள், உணவுப் பொருள் டப்பாக்கள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து, அவற்றை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும். வீட்டின் குளியலறை, மொட்டைமாடி, பூந்தொட்டிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணித்து அகற்ற வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மட்டுமின்றி, தெருக்கள், பொது இடங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தூய்மையை பேணுவதில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும், காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகளில் காய்ச்சல் கண்காணிப்பு, வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை, கொசுப்புழு ஒழிப்பு, புகைமருந்து/கொசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, விலையேற்றத்தினை கட்டுப்படுத்திடவும், அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதனை உறுதி செய்திடவும், தரமான பொருட்கள் சரியான அளவுகளில் பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைப்பதனை உறுதி செய்வதற்காக நியாய விலைக்கடைகள் மூலம் குடிமைப்பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதனை உறுதி செய்திடும் வகையில் பொருட்களின் இருப்பு, தரம், பதிவேடு, விநியோகிக்கப்படும் அளவு போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் ரூ.35.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடக் கட்டடத்தினையும், பெரியநாயகிபுரம் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.60.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினையும், ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் 1  மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, செட்டிகுறிச்சி ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மினி விளையாட்டு மைதானத்தின் பணிகள் குறித்தும், செட்டிக்குறிச்சி ஊராட்சியில் உள்ள குழந்தைகள் நல மையத்தினையும், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழகத்தின் பசுமைப் போர்வை அளவினை அதிகரித்திடவும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், பிராணவாயு வெளியேற்றத்திற்கான நல்ல சூழ்நிலையினை ஏற்படுத்தி தந்திடும் வகையில் அரசு அலுவலகங்கள், சாலை ஓரங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அதனடிப்படையில், பாலவநத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.9.00 இலட்சம் மதிப்பில் அரசு புறம்போக்கு நிலத்தில் 2000-ம் மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரிக்கப்படுகின்றன. அதனை சிறப்பான முறையில் பராமரித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கபட்டுள்ளன என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கா.வானதி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.கணேஷ், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News