மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (16.02.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில், நாராணபுரம் கிராமத்தில், ஸ்ரீ மாரியம்மாள் பயர் ஒர்க்ஸ் வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த நான்கு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினையும், காயமடைந்த இரண்டு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும்,வெம்பக்கோட்டை வட்டம், விஜயகரிசல்குளம் கிராமத்தில், வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த நான்கு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினையும்,
வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்தில், திவ்யா பயர் ஒர்க்ஸ் வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த ஒரு நபரின் வாரிசுதாரர்க்கு தலா ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினையும், தீவிர சிகிச்சைக்குப் பின்பு மரணமடைந்த ஒரு நபரின் வாரிசுதாரர்க்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும், காயமடைந்த ஐந்து நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும்,சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் கோகுலேஸ் பயர் ஒர்க்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீவிர சிகிச்சைக்குப் பின்பு மரணமடைந்த இரண்டு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும்,மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.6 இலட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில், வி.இலுப்பைகுளம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் சிறிய அளவிலான பால்பண்ணை திட்டத்தின் மூலம் 4 சதவீத வட்டி மானியத்துடன் 3-கறவை உறுப்பினர்களுக்கு தலா ரூ.2 இலட்சத்து 70 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.8 இலட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையினையும் என மொத்தம் 54 இலட்சத்து 60 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.மேலும், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 7-நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply