25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (06.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், மல்லாங்கிணறு பேரூராட்சியில் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் ரூ.230.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்பு வீடுகளில் பணிகளின் தரம் குறித்தும், ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்.

மேலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சமூக நிதி விடுதியில் பயிலும் மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு, உணவு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் தங்கு விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்கள் சேதுபதி அரசு மேநிலைப் பள்ளியில் தான் படிக்கிறார்களா என்பது பற்றி உறுதி தன்மையினை ஆராய்து, மேலும், காப்பகத்தின் செயல்பாடுகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தங்கும் வசதி, எண்ணிக்கை, மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், ஜோகில்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News