விருதுநகர் மாவட்டம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிவரும் வரும் பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திட்டத்தின் பயன் குறித்து கருத்துக்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகள் பெற்று வீடுகள் கட்டி வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.தமிழ்நாடு அரசு பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கலைஞர் கனவு இல்லம் திட்டம் மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.தமிழ்நாடு அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து வருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 2025- 26 ஆம் ஆண்டில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 172 பயனாளிகளுக்கும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 278 பயனாளிகளுக்கும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 220 பயனாளிகளுக்கும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 159 பயனாளிகளுக்கும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 127 பயனாளிகளுக்கும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 217 பயனாளிகளுக்கும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 95 பயனாளிகளுக்கும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 116 பயனாளிகளுக்கும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 201 பயனாளிகளுக்கும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 267 பயனாளிகளுக்கும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 48 பயனாளிகளுக்கும் என மொத்தம் 1900 பயனாளிகளுக்கு பணி நியமன அணைகள் வழங்கப்பட்டு வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 360 சதுர அடி பரப்பளவில் காங்கிரீட் வீடுகள் கட்டப்படுவதற்கு ஏறத்தாழ ரூ.3.50 இலட்சம் வழங்கப்படுகிறது.அதன்படி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், சூரனூர் ஊராட்சி தேனூர் கிராமத்தில்கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகள் தலா ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்து, தங்களுக்கான வீடுகள் கட்டி வரும் பயனாளிகளிடம் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.
0
Leave a Reply