விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.01.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளின் வங்கி கணக்கில் 3 நாட்களில் பணம் வரவு வைக்கப்படும் என மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம்) அவர்களால் தெரிவிக்கப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பயிர் கடன், வழங்கவும், கண்மாயில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறும்,
பல்வேறு நகராட்சிகள்,மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தவும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்எனமாவட்டஆட்சியர்அவர்கள்அறிவுறுத்தினார்கள்.வனவிலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் கிராம அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ள ஊராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.விவசாயிகளுக்கு காட்டுப் பன்றிகளால் அதிகளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடித்திட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இக்கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,), திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி மு.சுமதி, திரு.மோகன்தாஸ் சௌமியன் வேளாண்மை இணை இயக்குநர், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply