25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலகின் மிகப் பெரிய காற்றாலை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகின் மிகப் பெரிய காற்றாலை.

உலகின் மிகப் பெரிய காற்றாலையை நிறுவி சீன நாடு சாதனை செய்துள்ளது.டோங்பாங்  (Dongfang) எனும் நிறுவனத்தால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.காற்றாலை மின்சார உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு சீனா. அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்காவும், ஜெர்மனியும் உள்ளன. அதிகரித்து வரும் தன்னுடைய மின் தேவைகளை, சுற்றுச் சூழலைப் பெரிய அளவு பாதிக்காத வகையில் ஈடு செய்வதற்குச் சீனாமுயன்று வருகிறது. புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த பூசௌ என்னும் இடத்தில் இது நிறுவப்பட்டுள்ளது. இதன்மொத்த உயரம் 1,115 அடி. அதாவது, இது பாரிஸ் ஈபில் கோபுரத்தை விட உயரமானது. 

இது எளிதில் துருப்பிடிக்காதபடி அமைக்கப்பட்டுள்ளது. சூறாவளிகள் வந்தாலும் கூட இது தாக்குப் பிடிக்கும். அந்தளவுக்கு வலுவானது என்று இதன்  வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.இந்தக் காற்றாலை மணிக்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகின்ற காற்றில் இருந்து 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.இது 55,000 வீடுகளுக்குப் போதுமானது. இந்த ஒரு காற்றாலை 30,000 டன் நிலக்கரி பயன்பாட்டையும், 80,000 டன்கரியமில வாயு உமிழ்வையும் குறைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News