நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா: முதலாவது 'டி-20' போட்டியில் அபார வெற்றி!.
நியூசிலாந்து சென்று உள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணி 20 ஓவரில் 225/4 ரன் குவித்தது. கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு 'சேட்டன்' சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா கலக்கல் துவக்கம் தந்தனர்.
இந்திய அணி 19.4 ஓவரில் 230/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இரண்டாவது 'டி-20' போட்டி நாளை (அக். 24) கிறைஸ்ட்சர்ச்சில் நடக்க உள்ளது.
0
Leave a Reply