25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இலவச காமிக் புத்தக தினம் (FCBD) முன்னிட்டு 03.05.2025  மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளி மாணவர்களுக்கான  திருக்குறள் முற்றோதல் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இலவச காமிக் புத்தக தினம் (FCBD) முன்னிட்டு 03.05.2025 மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இலவச காமிக் புத்தக தினம் (FCBD)  ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் சனிக்கிழமை உலகெங்கிலும்  கொண்டாடப்படுகிறது.
 புதிய வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்நிகழ்வு கொண்டாடப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக குழந்தைகளின் டிஜிட்டல் திரை நேரத்தை  குறைத்து புத்தகங்கள் வாசிப்பை அதிகரிக்கும் வகையில் புதிய முன்னெடுப்பாக விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக காமிக்ஸ் நூலகம் புதிதாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.அந்த வகையில் வருகின்ற மே 3 ஆம் தேதி இலவச காமிக் புத்தக தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கான  திருக்குறள்கள் ஒப்புவித்தல் நிகழ்ச்சி இராஜபாளையம் காமிக் நூலகம் மற்றும் சிவகாசி அறிவுசார் மையம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

 இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு30 திருக்குறள்களை ஒப்புவிக்கும் 7 முதல் 10 வரை உள்ள மாணவர்களுக்கும், 50 திருக்குறள்களை ஒப்புவிக்கும் 11 முதல் 14  வயது உள்ள மாணவர்களுக்கும் காமிக்ஸ் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள  86082- 04154என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

 எனவே இந்த இலவச காமிக் புத்தக தினம் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News