25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


காத்திருக்கும் கன்னியர்- வெற்றி வேலாயுத சுவாமி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காத்திருக்கும் கன்னியர்- வெற்றி வேலாயுத சுவாமி.

திருப்பூர் மாவட்டம்ஊத்துக்குளிகதித்தமலையில்வெற்றிவேலாயுதசுவாமிஎன்னும் பெயரில்முருகன்இருக்க, தெய்வானையும், வள்ளியும் கன்னியராக உள்ளனர்.

முருகனின் திருத்தலங்களை தரிசிக்க அகத்தியர் யாத்திரை புறப்பட்டார். அவருடன் நாரதர் உள்ளிட்ட தேவர்களும் வந்தனர். ஒருநாள் பூஜை செய்வதற்கு எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்கவில்லை. நடந்த களைப்பில் அகத்தியருக்கும் தாகம் எடுத்தது. அவருக்கு காட்சியளித்த முருகன் வேலினைத் தரையில் துளைக்க நீரூற்று பீறிட்டது. அதில் தீர்த்தம் எடுத்து பூஜை நடத்தியதோடு, தண்ணீர் குடித்து தாகம் நீங்கினார் அகத்தியர்.ஊற்றுஎன்பதால் 'ஊற்றுக்குழி' எனப்பட்டது. நாளடைவில் 'ஊத்துக்குளி' என மருவியது. அற்புதம் நிகழ்த்திய முருகனுக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டது. வெற்றி வேலாயுதசுவாமி என அழைக்கப்படுகிறார். தெய்வானை, வள்ளிக்கு தனி சன்னதி உள்ளது.

திருச்செந்துாரில் சூரபத்மனை வதம் செய்த பின் முருகன் இங்கு தங்கினார். அப்போது மகாவிஷ்ணுவின் மகள்களான அமுதவள்ளி, சுந்தரவள்ளி தங்களை ஏற்கும்படி வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்து வேண்டினர்.அதற்காக இந்திரனின் மகளாக தெய்வானை என்ற பெயரிலும், வேடுவர்

தலைவன் நம்பிராஜனின் மகளாக வள்ளி என்னும் பெயரிலும் அப்பெண்களை பூமியில் அவதரிக்கச் செய்தார். இவர்களே கன்னியராக இங்குள்ளனர்.

வெற்றி வேலாயுத சுவாமியை வழிபட்டால் திருமண தடை நீங்கும். பிரிந்த தம்பதியர் சேர்வர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News