அருப்புக்கோட்டை, விருதுநகர், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் நகராட்சிகளில் புதிய சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்..
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் (13.02.2026) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், இயக்குநர்(நகராட்சி நிர்வாக இயக்குநரகம்) திரு.ப.மதுசூதன்ரெட்டி,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் அருப்புக்கோட்டை நகராட்சி கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையம், செவல் கண்மாய் புனரமைப்பு பணி மற்றும் கட்டங்குடி குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் நீருந்து நிலையம் உள்ளிட்ட ரூ.20.59 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அருப்புக்கோட்டை, விருதுநகர், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் நகராட்சிகளில் ரூ.24.33 கோடி மதிப்பில் 25.914 கி.மீ நீளத்திலான 154 புதிய சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சியில் ரூ.341.92 கோடி மதிப்பிலும், நகராட்சிகளில் அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.165.75 கோடி மதிப்பிலும், இராஜபாளையம் நகராட்சியில் ரூ.134.55 கோடி மதிப்பிலும், சாத்தூர் நகராட்சியில் ரூ.47. 17 கோடி மதிப்பிலும், திருவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.108.83 கோடி மதிப்பிலும், விருதுநகர் நகராட்சியில் ரூ.109.13 கோடி மதிப்பிலும் என மொத்தம் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கு ரூ.943.63 கோடி மதிப்பிலான சாலைகள், வடிகால் வசதி, தெரு விளக்குகள், குடிநீர் வசதி, குளம் அபிவிருத்தி, பூங்கா, மின் மயானம், பேருந்து நிலையம், சந்தை, அலுவலக கட்டடங்கள், அறிவுசார் மையம், பள்ளி கட்டிடம் மற்றும் பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மொத்தம் ரூ.1285.55 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில், 2021-ல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 10 இலட்சம் மக்களுக்கு 60 MLD குடிநீரும், நகராட்சிகள் மூலம் 5 இலட்சம் மக்களுக்கு 22 MLD குடிநீரும், பேரூராட்சிகள் மூலம் 1 இலட்சம் மக்களுக்கு 7 MLD குடிநீரும் என ஆக மொத்தம் 16 இலட்சம் மக்களுக்கு 89 MLD குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இராஜபாளையம் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர்த்திட்டம் ரூ.396 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு 3 இலட்சம் மக்களுக்கு கூடுதலாக43MLDகுடிநீர்வழங்கப்பட்டுள்ளது.அருப்புக்கோட்டை, சாத்தூர், மற்றும் விருதுநகர் நகராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஒன்றியங்களைச் சார்ந்த 1286 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய 3 குடிநீர் திட்டங்கள் ரூ.1708 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
மேலும், மாவட்டத்தில் 2 கூட்டு குடிநீர் திட்டம் ரூ.60 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இது முடிவடையும் போது 11 MLD குடிநீர் கூடுதலாக வழங்கப்படும். திருவில்லிபுத்தூர் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு பணி ரூ.9 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இது முடியும் போது 87 ஆயிரம் மக்களுக்கு 2 MLD குடிநீர் கூடுதலாக வழங்க முடியும்.
காரியாபட்டி, மல்லாக்கிணறு, கொடிக்குளம் மற்றும் சேத்தூர் பேரூராட்சிகளுக்கான குடிநீர் பணிகள் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இது முடியும் போது 71 ஆயிரம் மக்களுக்கு கூடுதலாக 7 MLD குடிநீர் வழங்கப்படும்.வரும் மார்ச் 2026 இல் இந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் சுமார் 28 இலட்சம் மக்களுக்கு 205 MLD குடிநீர் தாராளமாக வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.அதுபோல பாதாள சாக்கடை திட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.330 கோடி மதிப்பில் சாத்தூர் நகராட்சி மற்றும் இராஜபாளையம் நகராட்சிகளில் இரண்டு பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.தற்போது நடைபெற்று வரும் திட்டங்களில் ரூ.297 கோடி மதிப்பீட்டில் அருப்புக்கோட்டை நகராட்சி பாதாள சாக்கடை திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் முடியும் போது ஒரு லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை பொறுத்தளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுமார் ரூ29,000 கோடி பணம் வழங்கி, எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில், சாலைகள், தெரு விளக்கு வசதிகள், கழிவுநீர் வசதிகள், மழை நீர் வடிகால்கள், மயானம், கல்வி கட்டடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட ஒரு மனிதன் காலையில் வீட்டிலிருந்து புறப்படுவதில் இருந்து, இரவு வீட்டில் தூங்கச் செல்லும் வரை தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், நீர் நிலைகளை மேம்படுத்தவும், சாலைகளை மேம்படுத்தவும் தொடர்ந்து நகர்ப்புர பகுதிகளுக்கு தேவையான அனைத்தையும் நம்முடைய தமிழக அரசு செய்திருக்கிறது.
அது எல்லாவற்றை காட்டிலும் இன்றைக்கு காலை கலைஞர் மகளிர் உரிமை பெறும் மொத்தம் 1.31 கோடி பெண்களுக்கு 3 மாத உரிமைத்தொகையுடன், கூடுதலாக ரூ2000 என மொத்தம் ரூ.5000 ஒரே தவணையில் சிறப்பு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகள், பேரூராட்சிகளின் அனைத்து இடங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீரும், தேவையான அடிப்படை வசதிகளும், சாலைகளும், சந்தைகளும், பொது போக்குவரத்திற்கான பேருந்து நிலையங்களும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயலாற்றிக் கொண்டிருக்கும் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு அனைவரும் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
தமிழக அரசானது, அருப்புக்கோட்டை நகராட்சியின் மூன்று திசைகளிலும் பேருந்து நிலையம் அமைத்துக் கொடுத்து போக்குவரத்திற்கேற்றாற் போல், சிறப்பு செய்துள்ளது.அதுபோல, வைகையிலிருந்து கிடைக்கக் கூடிய தண்ணீர் உப்புத்தன்மை இருப்பதாக தாய்மார்கள் தெரிவித்த நிலையில், அதனை நிவர்த்தி செய்வதற்கும் மூலதன நிதி 2023-24 இன் கீழ் ரூ.4.95 கோடி மதிப்பில் வைகையிலிருந்து பெறக்கூடிய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, சுத்திகரிப்பு செய்து பெறப்படும் தண்ணீரானது தாமிரபரணி தண்ணீர் போல் சுவையாக இருக்கக் கூடிய அளவில் கிடைப்பதற்கு இன்றைய தினம் வழிவகை செய்துள்ளோம்.
அதுபோல, செவல் கண்மாயில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.4.45 கோடி மதிப்பில் நிரம்பியிருந்த ஆகாயத்தாமரையினை நீக்கி, நடைபயணம் மேற்கொள்வோருக்கு எளிதாகவும், சுற்றுலாத் தளம் போலவும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.அருப்புக்கோட்டை தொகுதிக்கு ஒரே ஒரு குடிநீர் ஆதாரம் தான் இருந்தது. தற்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூலம் இன்றைய தினம் மூன்றாவது குடிநீர் திட்டம் வழங்கவிருக்கிறோம். நம்முடைய மாவட்டத்திலே குடிநீர் பிரச்சினை இல்லாத ஊர் என்ற அளவிற்கு இந்த தொகுதி மாறியிருக்கிறது. அடுத்ததாக, அருப்புக்கோட்டை பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இத்தகைய திட்டங்களை நமக்கு அளித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.இந்நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply