25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை  அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் பாலிடெக்னிக் கல்லூரியில் (29.01.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், சாத்தூர் வட்டத்தில் தனியார் கல்லூரிகளில் பயிலும் 1075 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.

பின்னர், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வட்டத்தில் தனியார் கல்லூரிகளில் பயிலும் 249 மாணவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மடிக்கணினிகளை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 8,678 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 6,562 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன. அதில், இன்றைய தினம் சாத்தூர் வட்டாரத்தில் 1,075 மடிக்கணினிகளும், சிவகாசி வட்டாரத்தில் 1,551 மடிக்கணினிகளும், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 249 மடிக்கணினிகளும் என மொத்தம் 2,875 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.முன்னொரு காலத்தில் படிக்கிற பொழுது, முதலில் மணலை பரப்பி எழுத வைத்து பாடம் கற்பிக்கப்பட்டது. பிறகு சிலேட்டுகளில் எழுதி படித்தும், பின்பு சிலேடு உடைந்து விடுவதால் தகரத்தில் முலாம் பூசி சிலேடு பயன்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் பள்ளியில் சென்று அரசால் இலவசமாக சிலேடு, புத்தகம் கொடுப்பது என்பது மிகப்பெரிய காரியமாக இருந்தது.

இன்று அதெல்லாம் பழமையாகி விட்டது. இன்றைக்கு நம்முடைய கையில் செல்போன் மற்றும் மடிக்கணிகள் உள்ளது. காரணம் என்னவென்றால் உலகம் மிக வேகமாக நகர்ந்து வருகிறது. அந்த உலகத்தோடு இணையாக மாணவர்களும் பயணிக்க வேண்டி இருக்கின்றது. அதனால், மாணவர்களை தயார் படுத்த வேண்டிய கடமை நம்முடைய அரசுக்கு இருக்கிறது.தற்போது கல்லூரி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் நிறைய பேர் கல்லூரிக்கு சென்றிருக்க மாட்டார்கள். கல்லூரிக்கு முன்னரே பெரும்பாலும் படிப்பை முடித்து விடுவார்கள்.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் உங்களை எல்லாம் படிக்க வைத்திருக்கின்றார்கள். படிக்க வைத்ததற்கு பிறகு உங்களுக்கு திறன்களை வளர்க்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்லும்போது, அவர்கள் கொடுக்கக்கூடிய ஊதியத்திற்கு ஏற்றார் போல எவ்வளவு திறமை இருக்கிறது, நீங்கள் தகுதியாக இருக்கிறீர்களா என்று பார்க்கிறார்கள்.

எனவேதான்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அந்தத் திறன்களை வளர்ப்பதற்காக நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக உங்களுடைய திறமைகளை வெளியே கொண்டு வரும் பணியை செய்கிறார்கள். அந்த திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கான பணியை செய்வதற்கு உறுதுணையாக இருக்கத்தான் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றஇளைஞர்கள் அதிகமாக இருக்கின்ற நாடு இந்தியா. இளைஞர்களை நம்பித்தான் எதிர்காலம் இருக்கின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை சாமர்த்தியதனமாகவும், திறமை வாய்ந்தவர்களாகவும் உருவாக்க வேண்டிய கடமை அரசினுடைய கடமை.

கடந்த 5 வருடங்களில் மாவட்டத்தில், அனைத்து இடங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்போது வேலை வாய்ப்புக்கான தேவை அதிகமாக இருக்கிறது. வரும் காலங்களில் நம்முடைய  முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்களுக்கு வேண்டிய வேலை வாய்ப்புகளை நம்முடைய மாவட்டத்திலேயே உண்டாக்கக்கூடிய பணிகளை செய்து வருகிறோம்.நீங்கள் வேலைக்கு வேற மாவட்டத்திற்கு செல்ல தேவையில்லை. நம்முடைய மாவட்டத்திலேயே தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும். அதற்கு தேவையான சாலை வசதிகளும், விமான, துறைமுக வசதிகளும் இருக்கின்றன.

திருப்பூர், சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய நிலை இல்லாமல் நம்முடைய பகுதிகளிலேயே வேலைவாய்ப்பை உண்டாக்கக்கூடிய பணியை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆசியோடு உங்களுக்கு செய்து கொடுக்கின்றோம்.தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் அரசு எப்படி படிக்காமல் இருந்த ஒரு சமுதாயத்தை படிக்க வைத்ததோ, அதுபோல, படிக்க வைப்பதோடு இல்லாமல் எதிர்காலத்தில் உங்களுக்கான வேலை வாய்ப்புகளை பல்வேறு இடங்களில் உருவாக்கித் தரக்கூடிய சூழ்நிலையை, அடுத்து வரக்கூடிய காலங்களில் நம்முடைய   முதலமைச்சர் அவர்கள் செய்து கொடுப்பார்கள்.

மாணவர்கள் மடிக்கணினியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரக்கூடிய உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்பாமல், அதை ஆராய்ந்து, உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். உண்மையை தெரிந்து கொண்டு எதிர்காலம் உங்கள் கையிலே வரக்கூடிய சூழ்நிலையை உருவாக்கத்தான் உலகம் உங்கள் கையில் திட்டம். அதை நீங்கள் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் வேலை இல்லாத பட்டதாரிகள் இல்லை என்ற சூழ்நிலையை மாற்றி எல்லோருக்கும் வேலை கிடைத்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்குவோம் என தெரிவித்தார்.தமிழ்நாட்டில், அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கு முதற்கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 8,678 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 6,562 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.அதில், இன்றைய தினம் சாத்தூர் வட்டாரத்தில் 1,075 மடிக்கணினிகளும், சிவகாசி வட்டாரத்தில் 1,551 மடிக்கணினிகளும், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 249 மடிக்கணினிகளும் என மொத்தம் 2,875 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில் நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் "அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்" என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன. டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை, மென்பொருள் உருவாக்கம் (Software Development), தரவு உள்ளீடு(Data Entry), டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing), வரைகலை வடிவமைப்பு (Graphic Design), குறியிடுதல் (Coding), வலை வடிவமைப்பு (Web Designing), செயற்கை நுண்ணறிவு கருவிகள் (AI Tools), சுயாதீன வேலை (Freelancing) போன்ற துறைகளில் "புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை” என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது.

இதனால் குடும்ப வருமானம் உயர்ந்து கிராம நகர இடைவெளி குறைந்து, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில் முயற்சிகளும் உருவாகும் வாய்ப்பு அமையும். இத்திட்டம், "கல்வி மூலம் சமூக மேம்பாடு தொழில்நுட்பம் மூலம் பொருளாதார முன்னேற்றம்” என்பதையும், "உலகம் உங்கள் கையில்” என்ற தமிழ்நாட்டின் மாபெரும் டிஜிட்டல் கனவையும் நனவாக்கும் வரலாற்றுப் பெருமைகள் சேர்க்கும் மாபெரும் கல்விப் புரட்சித் திட்டம் ஆகும். இந்த மடிக்கணினிகளை நல்ல விதமாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.கனகராஜ்(சாத்தூர்), திரு.மாரிமுத்து(அருப்புக்கோட்டை), அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News