68வது சீசன் தேசிய துப்பாக்கி சுடுதலில் 2 வது தங்கம் வென்ற திலோத்தமா !
கர்நாடகாவின் திலோத்தமா சென் ,ஜூனியர் பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் (253.1 புள்ளி) 2 வது தங்கம் வென்றார்.
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 68வது சீசன் போபாலில், பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில், ஹரியானாவின் அமீரா அர்ஷத், 251.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றார். ரயில்வே வீராங்கனை ராஜ்ஸ்ரீ அனில்குமார் சஞ்சேதி வெள்ளி வென்றார். சட்டீஸ்கரின் பிரஞ்சு ஸ்ரீ சோமனி (230.5) வெண்கலம் கைப்பற்றினார்.
உ.பி.,யின் ஜுஹைர் கான் ஆண்களுக்கான 'டிராப்' பிரிவு பைனலில் (43 புள்ளி) தங்கம்வென்றார். உத்தரகாண்ட் டின் ஷபாத் பரத்வாஜ் (40), ஐதராபாத்தின் கைனன்செனாய் (33) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். பஞ்சாப், வெள்ளி, உத்தரகாண்ட், வெண்கலம் வென்றனர்.
0
Leave a Reply