ஆமத்தூர் AAA கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான திருக்குறள் கற்ப்பித்தல் பயிலரங்கம் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம்,ஆமத்தூர் AAA கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான திருக்குறள் கற்ப்பித்தல் பயிலரங்கம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில், திருக்குறளின் 1330 குறள்களையும் ஒப்புவித்தல் செய்த 7 அரசு பள்ளி மாணவியர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசாக வழங்கினார்.இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்பது திருக்குறளை ஆர்வத்தோடு மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் என்னென்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, மாணவர்களுக்கு எளிய வடிவில் கற்க வைப்பது.
இன்றைய சூழ்நிலையில் திருக்குறளை கற்பிப்பதற்கு, யூ-டியூப் வாயிலாகவும், இணையம், சங்கீதத்தின் வழியாகவும், திருக்குறள் சார்ந்த ஓவியங்கள் மூலமாகவும், வினாடி வினா மூலமாகவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 1330 திருக்குறளையும் கற்பிப்பதற்கு தமிழ் இணைய வழி கழகம் உள்ளது. அதில் 1330 குறளுக்கும் ஓவிய விளக்கமும், நாட்காட்டியும் உள்ளன.
திருக்குறளை நாம் ஒரு வாழ்வியலாக மாற்ற வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய நுகர்வு கலாச்சாரம் கூடுதலாக வர வர நம்முடைய தேவைகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயல்பாகவே நம்முடைய விழுமியங்கள் குறைய ஆரம்பிக்கும் என சமூக பொருளாதார விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்
திருக்குறளில் நன்றாக வாசிக்கக்கூடிய, நினைவாற்றல் இருக்கக்கூடிய, கல்வியில் சிறந்து விளங்க கூடிய மாணவர்களை தேர்வு செய்து அவர்களை நீங்கள் ஊக்குவிக்கும் பொழுது ஒவ்வொரு வருடமும் திருக்குறளை கற்கும்; மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த முடியும்.
திருக்குறளை மாணவர்கள் அவர்கள் மனம் உவர்ந்து கற்பதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன என்பதனை ஆசிரியர்கள் அறிந்து கொண்டு, திருக்குறளை எளிய முறையில் அதாவது, திருக்குறளை சீர்படுத்துவது என்பதும், அதனை அடி பிறழாமல் எழுதுவது என்பதும் மாணவர்களுக்கு கடினமான ஒன்றாக உள்ளது. அதனையும் தாண்டி திருக்குறளை கற்பிப்பது மிக மிக முக்கியம.; இப்படிப்பட்ட ஒரு முன்னெடுப்பு ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு மாணவனையாவது ஓராண்டிற்குள் 360 திருக்குறளை மனப்பாடம் செய்ய வைத்து குரல் மாணவனாக உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் மூலமாக வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை பெற வைக்க வேண்டும்.இவ்வாறு திருக்குறள் மீது ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இருந்தால் எதிர்கால தமிழ்நாட்டிற்கும் எதிர்காலகுழந்தைகள்நலத்திற்கும்,எதிர்காலதமிழ்சமூகநலத்திற்கும்உறுதுணையாகஅமையும்எனமாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்.தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அரசு பள்ளி தமிழ் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply