முகத்தை பளிச்சென ஆக்குவதற்கு...
முகத்தை பளிச்சென ஆக்குவதற்கு, தேன் சிறந்த தீர்வு. வெறும் தேனை தினமும் சருமத்தில் தேய்த்துக்கொள்ளலாம்.
கண், மூக்கு, உதடு பகுதிகளைச் சுற்றிக் கருவளையம் இருந்தால் ,புளித்த தோசை மாவுடன், தக்காளி சேர்த்து முகத்தில் தேய்த்தால் கருவளையம் நீங்கி பொலிவான சருமத்தைப் பெறலாம்.
பெண்கள், மஞ்சளுடன் கடலை மாவு சேர்த்து ஃபேஸ் பேக் போட்டுக்கொண்டால், வெயிலின் புற ஊதாக்கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
பப்பாளியை சிறு துண்டுகளாக நான்கு ஸ்பூன் எடுத்துக்கொண்டு, அதில் கொஞ்சம் பால் மற்றும் தேனை கலந்து ,ஒரு பேஸ்டை போல செய்து கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் 15நிமிடம் வைத்து கழுவிடலாம்.
பப்பாளி உங்கள் சருமத்தில் இருக்கும், டெட் செல்சை தளர விடுகிறது. மேலும் தேன் -பால் கலவை உங்கள் வறண்ட சருமத்திற்கு சிறந்தது
0
Leave a Reply