ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் இரு மூத்த வீராங்கனைகள்மோதினர்.
ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் சுற்றில் அமெரிக்காவின் அனுபவ வீனஸ் வில்லியம்ஸ், 45, (உலக ரேங்கிங்கில் 576வது இடம்), ஜெர்மனியின் டாட்ஜானா மரியாவிடம், 38, (42வது இடம்) 4-6, 3-6 என தோல்வி அடைந்தார்.
இது, டபிள்யு. டி.ஏ., ஒற்றையர் பிரிவு வரலாற்றில் இரு மூத்த வீராங்கனைகள் (இருவர் வயதும் சேர்த்தால் 83 ஆண்டு) மோதிய போட்டி ஆனது. இதனை காண தனது மகள்கள் சார்லோட்டி, 12, சிசிலியாவை, 4, அழைத்து வந்திருந்த மரியா,"எனது மகள்கள் வீனஸ் வில்லியம்சின் ரசிகைகள்,இருவரும் ஆட்டத்தை பார்த்து மகிழ்ந்தனர்,"என்று கூறினார்.
0
Leave a Reply