சரும பொலிவை அதிகரிக்கும் தேநீர் வகைகள்
ரோஜா தேநீர்
ரோஜா வாசனை மிக்க பூ. ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் நறுமணமிக்க பன்னீர் அழகுப் பராமரிப்பில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கும் குல்கந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. சரும பராமரிப்பில் ரோஜாவுக்கு தனி இடம் உண்டு. இது சரும சுருக்கங்களை குறைத்து பொலிவாக வைத்திருக்க செய்யும். இந்த ரோஜா இதழ்களை தேநீராக்கி குடித்தால் சருமம் பளபளப்பதை நன்றாகவே பார்க்கலாம்.
மல்லிகை பூ தேநீர்
மல்லிகை தேநீரில் இருக்கும் இயற்கை எண்ணெய்கள் சருமத்தை புத்துயிர் பெறவும் நிறமிகளை சமன் செய்யவும் உதவுகிறது. சருமத்தில் மெல்லிய கோடு களை குறைக்கவும் செய்கிறது. இந்த மல்லிகை தேநீரை தினமும் பருகி வருவதன் மூலம் சருமத்தை பளபளப்பாக்கவும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் செய்யும்.
0
Leave a Reply