25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாவட்ட அளவிளான  வன்கொடுமை   தடுப்பு விழிப்புணர்வு  மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட அளவிளான  வன்கொடுமை  தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் .

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு  விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவானது 29.03.2023 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி குழுவானது மூன்று வருடத்திற்குள்  கலைக்கப்பட வேண்டும்.எனவே நடைமுறையில் உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நல்வாழ்வு குறித்த மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பாக தற்போது  உள்ள விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது கலைக்கப்படுகிறது. 

            புதிய குழு அமைத்து, அக்குழுவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைவராகவும், மாவட்ட ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்- செயல் உறுப்பினராகவும் செயல்படுவார்கள்.  இக்குழுவில்   அதிகாரப்பூர்வமான உறுப்பினர்களாக  காவல்கண்காணிப்பாளர் மற்றும் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள் (Gazatted Officers) செயல்படுவார்கள்.

            நாடாளுமன்றம் அல்லது  மாநில சட்டமன்ற  உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டவர்  (பட்டியலினத்தைச்  சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்) அல்லது  மாநில அரசால்  பரிந்துரை    செய்யப்படும்,  விருதுநகர் மாவட்டத்தினைச்    சேர்ந்த  இரண்டு நபர்கள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற    உறுப்பினர்களாக  ஆதிதிராவிடர்    மற்றும்    பழங்குடியினர்  வகுப்பைச் சேர்ந்த   சமுக ஆர்வலர்கள்   மற்றும்   கல்வியாளர்கள்    விண்ணப்பிக்கலாம்.

               எனவே , விருப்பமுள்ள  தகுதி வாய்ந்த   நபர்கள்   விருதுநகர்  மாவட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்  நல்வாழ்வு  குறித்த  மாவட்ட  அளவிலான   வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக  சேர்வதற்கு வருகின்ற 15.07.2026 –க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S . அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News