வரகு அரிசி ஃபிரைட் ரைஸ் (Varagu Arisi Fried Rice)
தேவையான பொருட்கள்:
வரகு அரிசி – 1 கப் (வேக வைத்தது)
எண்ணெய் அல்லது நெய் – 3 ஸ்பூன்
நறுக்கிய கேரட் – 2 ஸ்பூன்
நறுக்கிய பீன்ஸ் – 2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
மிளகுத் தூள் – அரை ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வரகு அரிசியை நன்றாகக் கழுவி, 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து உதிரியாக வேக
வைத்துக்கொள்ளவும் .(குழையாமல் பார்த்துக் கொள்ளவும்). பின்னர் அதை ஆறவிடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து
வதக்கவும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும். காய்கறிகள்
முழுமையாக வேகாமல் முக்கால் பதத்திற்கு வெந்தால் நன்றாக இருக்கும்.
வதக்கிய காய்கறிகளுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்க்கவும்.
சோயா சாஸ் சேர்ப்பதாக இருந்தால் இப்போது ஊற்றி கிளறவும்.
இப்போது வேக வைத்து ஆற வைத்துள்ள வரகு அரிசியைச் சேர்த்து, தீயை அதிகரித்து
நன்றாகக் கிளறவும்.
அரிசி உடையும்படி கிளறாமல், மென்மையாகப் பிரட்டிவிட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து
இறக்கவும்.
சூடான, சத்தான வரகு அரிசி ஃபிரைட் ரைஸ் தயார்!
0
Leave a Reply