25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


வரகு அரிசி கேசரி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வரகு அரிசி கேசரி .

தேவையான பொருட்கள்:
வரகு அரிசி - 1 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் - 1 கப்
நெய் - தேவையான அளவு (சுமார் 4-5 ஸ்பூன்)
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
தண்ணீர் - 2 முதல் 2.5 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)
செய்முறை:

முதலில் வரகு அரிசியை நன்றாகக் கழுவி, ஈரப்பதம் போக நிழலில் உலர வைக்கவும் அல்லது
வாணலியில் சிறு தீயில் வறுக்கவும்.
பின் அதை ஆறியதும் மிக்ஸியில் ரவை பதத்திற்கு லேசாகப் பொடித்துக் கொள்ளவும் (அதிக
நைசாக அரைக்க வேண்டாம்).
கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து தனியாக எடுத்து
வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் அல்லது குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் பொடித்து வைத்துள்ள வரகு அரிசியைச் சேர்த்துக் கட்டி தராமல்
நன்றாகக் கிளறி வேகவிடவும். அல்லது குக்கரில் 3 முதல் 4 விசில் விட்டு வேக வைத்துக்
கொள்ளலாம்.
வரகு அரிசி நன்கு வெந்ததும், எடுத்து வைத்துள்ள சர்க்கரை அல்லது வெல்லத்தைச்
சேர்க்கவும்.
சர்க்கரை கரைந்து கேசரி பதத்திற்கு வரும் வரை மிதமான தீயில் கிளறவும்.
அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து ஒட்டாமல் வரும் வரை கிளற
வேண்டும்.
இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால், மணக்கும்
சுவையான வரகு அரிசி கேசரி தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News