வரகு அரிசி முறுக்கு (Varagu Arisi Murukku)
தேவையான பொருட்கள்; -
வரகு அரிசி மாவு (Varagu Maavu) - 1 கப்,
பொட்டுக்கடலை மாவு (Roasted Gram Flour) - 2 முதல் 3 டேபிள் ஸ்பூன்,
உளுந்து மாவு (Urad Dal Flour) - 2 டேபிள் ஸ்பூன்,
வெண்ணெய் (Butter) அல்லது சூடான எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
ஓமம் (Ajwain) அல்லது சீரகம் - 1 டீஸ்பூன்,
வெள்ளை எள்ளு (Sesame seeds) - 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு,
தண்ணீர் - மாவு பிசைய தேவையான அளவு,
செய்முறை ; -
ஒரு அகலமான பாத்திரத்தில் வரகு அரிசி மாவு, உளுந்து மாவு மற்றும் பொட்டுக்கடலை மாவு
ஆகியவற்றைச் சேர்க்கவும்.
மாவு நன்றாகக் கலந்த பிறகு, அதில் ஓமம் (அல்லது சீரகம்), வெள்ளை எள்ளு,
பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இவற்றுடன் உருக்கிய வெண்ணெய் அல்லது காய்ந்த சூடான எண்ணெய் சேர்த்து கைகளால்
நன்றாகப் பிசறவும்.
இப்போது சிறிது சிறிதாக வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, முறுக்கு மாவு பதத்திற்கு
(கையிலொட்டாத பதம்) மென்மையாகப் பிசைந்து கொள்ளவும்.
முறுக்கு குழலில் (Mould) உங்களுக்குப் பிடித்த அச்சை (Sollu) போட்டு, உள்ளே மாவை நிரப்பவும்.
ஒரு சுத்தமான வெள்ளை துணி அல்லது தட்டின் மீது சிறிய முறுக்குகளாகப் பிழிந்து
கொள்ளவும்.
கடாயில் பொரிக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும், பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை மெதுவாக எண்ணெயில் போட்டு
மிதமான தீயில் பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
நன்கு ஆறிய பிறகு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு சேமித்தால் ஒரு மாதம் வரை
மொறுமொறுப்பாக இருக்கும்.
0
Leave a Reply