மாவட்டத்தில் மொத்தம் 705.608 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு உள்ளது என விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (25.09.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், பருத்தி சாகுபடிக்கான மானியம் வழங்க வேண்டும். பருத்தி உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய காலத்தில் நிவாரணம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாய மின் இணைப்புகளுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் விரைந்து வழங்க வேண்டும். வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பண்ணை குட்டை அமைப்பதற்கு மானியம் வேண்டுதல். உரிய ஆவணங்களின் அடிப்படையில் வண்டல் மண் எடுத்து பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கிட வேண்டும். மேட்டுப்பட்டி மற்றும் வெங்கடாச்சலபுரம் கிராமங்களில் உலர்களம் அமைத்துக் கொடுக்க வேண்டும். காரியாப்பட்டி வட்டாரத்தில் நிலக்கடலை விதை காலதாமதமின்றி உரிய பருவகாலத்திற்குள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.கொடிகுளம் கண்மாயின் தென்மேற்கு முனையிலிருந்து கூமாபட்டி இராமசாமியாபுரம் இடையே வரை உள்ள நீர் வரத்து ஓடையை அளந்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்திற்கு கூடுதல் 21 உலர்களம் அமைத்திட சென்னை இயக்குநகரத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி வரப்பெற்றதும் தேவைப்படும் இடங்களில் உலர்களம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இராஜபாளையம் வட்டாரம், மேட்டுபட்டி கிராமத்தில் நெல்குடோன் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். உழவன் செயலி மூலம் இ-வாடகை mts.aed.tn.gov.in என்ற இணைய தளத்தில் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.எஸ்.கொடிகுளம் கண்மாயின் தென்மேற்கு முனையிலிருந்து கூமாபட்டி இராமசாமியாபுரம் இடையே வரை உள்ள நீர் வரத்து ஓடையை அளவீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்மாய் மற்றும் குளங்களில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மாவட்டத்திலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் விதைகள் 187.785 மெட்ரிக் டன்னும், சோளம் விதைகள் 3.571 மெட்ரிக் டன்னும், கம்பு விதைகள் 3.640 மெட்ரிக் டன்னும், குதிரைவாலி விதைகள் 8.630 மெட்ரிக் டன்னும், வரகு விதைகள் 0.490 மெட்ரிக் டன்னும், தினை விதைகள் 0.120 மெட்ரிக் டன்னும், மக்காச்சோளம் விதைகள் 79.960 மெட்ரிக் டன்னும், பாசிப்பயறு விதைகள் 4.087 மெட்ரிக் டன்னும், உளுந்து விகைள் 19.540 மெட்ரிக் டன்னும், துவரை விதைகள் 1.673 மெட்ரிக் டன்னும், நிலக்கடலை விதைகள் 22.176 மெட்ரிக் டன்னும், எள் விதைகள் 1.498 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 333.170 மெட்ரிக் டன் விதைகளும்,
தனியார் விற்பனை மையங்களில் நெல் விதைகள் 170.835 மெட்ரிக் டன்னும், சோளம் விதைகள் 1.2 மெட்ரிக் டன்னும், கம்பு விதைகள் 0.613 மெட்ரிக் டன்னும், மக்காச்சோளம் விதைகள் 154.30 மெட்ரிக் டன்னும், பாசிப்பயறு விதைகள் 1.70 மெட்ரிக் டன்னும், உளுந்து விகைள் 23.975 மெட்ரிக் டன்னும், பருத்தி விதைகள் 16.188 மெட்ரிக் டன்னும், சூரிய காந்தி விதைகள் 3.627 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 372.438 மெட்ரிக் டன் விதைகளும் என ஆக மொத்தம் 705.608 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.திருப்பதி, மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) திரு.பால்பாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திருமதி அ.அம்சவேணி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா, தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.அ.ஆறுமுகம், வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) திருமதி வளர்மதி, அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ஆனந்தி, உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply