வெஜிடேபிள் சால்னா
தேவையான பொருட்கள்: காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு) - 3/4 கப் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)புதினா - 10 இலைகள் ,எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
வதக்கி அரைப்பதற்கு - துருவிய தேங்காய் - 1/4 கப் , பெரிய வெங்காயம் - 1 , தக்காளி - 1 , இஞ்சி - 1/4 இன்ச் , பூண்டு - 4 ,சோம்பு - 1/2 டீஸ்பூன் , கசகசா - 1/2 டீஸ்பூன் , மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் , மல்லித் தூள் - 2 டீஸ்பூன் , பட்டை - 1/4 இன்ச் ,கிராம்பு - 2 *,அன்னாசிப் பூ - 1 , ஏலக்காய் - 1
செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய் மற்றும் மசாலாப் பொடியைத் தவிர அனைத்தையும் போட்டு, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் அதில் மசாலா பொடிகளை சேர்த்து கிளறி, தேங்காயையும் போட்டு 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். கலவை குளிர்வதற்குள், மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். மீல் மேக்கர் பெரிதான பின்னர், அந்த மீல் மேக்கரை குளிர்ந்த நீரில் ஒருமுறை போட்டு எடுத்து பிழிந்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வதக்கி வைத்துள்ள வெங்காய கலவையை மிக்ஸியில் போட்டு, சிறிது நீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, புதினா சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, அரைத்து வைத்துள்ள மசாலா, மீல் மேக்கர் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 1-2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து கொத்தமல்லியை மேலேத் தூவினால், சுவையான வெஜிடேபிள் சால்னா ரெடி.
0
Leave a Reply