விருதுநகர் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்
விருதுநகர் மாவட்டம், அப்பைநாயக்கன்பட்டியில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர்வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்தலைமையில்,வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (05.08.2024) கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்முகாமில்,5 பயனாளிகளுக்குரூ.1.61 இலட்சம்மதிப்பிலானஇலவசவீட்டுமனைபட்டாக்களையும், வேளாண்மைத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.அனைத்து தரப்பு மக்களுக்கும் 15 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். தற்போது மக்களுடன் முதல்வர் முகாம்கள் மூலம் ஐந்து அல்லது ஆறு கிராமங்களை ஒரு கூட்டாக அமைத்து ஒரு பொதுவான இடத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அதற்கான சரியான தீர்வுகளை வழங்கி வருகிறார்கள்., கலைஞர் மகளிர் உரிமைத்தொகைகள் கிடைக்க பெறாதவர்களுக்கும், முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்தோர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் விரைவாக தீர்வு காணப்படும்.தங்கள் பகுதியில் நடைபெறும் குறிப்பிட்ட முகாம் நாட்களில் பொதுமக்கள் அனைவரும் “மக்களுடன் முதல்வர்” முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
ஒரு அரசினுடைய சேவைகளில் மிக முக்கியமானது பொதுமக்களிடம் அவர்களுக்கு இருக்கக்கூடிய தனிப்பட்ட, பொதுநலம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை உரிய கால அவகாசத்திற்குள் அந்த கோரிக்கைகளுடைய நியாயங்களின் அடிப்படையில் அவற்றை மிக விரைவாக நிறைவேற்றித் தர வேண்டும் என்பது தான். நமது விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களிலும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமும், அமைச்சர் பெருமக்கள் அவர்களிடமும் மனுக்களை நேரில் சென்று அளித்து வருகிறார்கள்.மேலும், இ-சேவை மையங்களின் மூலமாக அரசின் சேவைகளை இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கோரிக்கைகள் பெறப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அவ்வபோது நடக்கக்கூடிய மக்கள் தொடர்பு திட்ட முகாம், ஒவ்வொரு மாதம் நடக்கக்கூடிய சிறப்பு முகாம்கள் ஆகியவற்றிலிருந்து கோரிக்கை மனுக்கள் வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
ஒரு மனுவின் மீது ஒன்றிற்கு மேற்படப்ட துறைகள் இணைந்து தீர்வு காண வேண்டி உள்ளது. அதற்காக தான் 15 துறைகளை கண்டறிந்து, அந்த துறைகளையெல்லாம் நான்கு அல்லது ஐந்து கிராமங்கள் ஒன்றாக இணைத்து ஒரு இடத்தை மையமாகக் கொண்டு பொதுவான இடத்திற்கு நேரடியாக சென்று மனுக்களை வாங்குவது மட்டுமல்லாமல், பெறக்கூடிய மனுக்களை எவ்வளவு நாளில் தீர்வு கண்டுள்ளோம் என்பதும், அதற்கான பதில் அந்தந்த மனுதாரர்களுக்கு சரியானதாக இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது..தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டமாக நமது மாவட்டம் தான் முதலிடத்தில் இருக்கிறது. மேலும், கலைஞர் உரிமைத்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதிய தொகை என எந்தவொரு கோரிக்கையாக இருந்தாலும், அதனை பரிசீலனை செய்து, அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்கி படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் .எனவே பொதுமக்கள் தரக்கூடிய கோரிக்கை மனுக்கள் ஒவ்வொன்றும் முழுமையாகவும், கவனமாகவும் பரிசீலிக்கப்படும். மேலும், அந்த மனுக்களை விரைவாக செயல்படுத்துவதற்கு தான் இந்த திட்டம். எனவே இந்த திட்டத்தை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply