இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கும் பொழுது .....
காலையில் வைத்த சாம்பார் மீதம் ஆகிவிட்டால்,மீண்டும் மாலையில் பயன்படுத்தும் போது சிறிது வெந்தயம் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி விதை இரண்டையும் வறுத்து பொடி செய்து குழம்பில் சேர்த்து கலந்தால் ஹோட்டல் சாம்பார் போல நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும். கொஞ்சம் மல்லித்தழை போட்டு இறக்கவும்..
கடலை பருப்பை வேக வைத்து கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, வேக வைத்த பருப்பில் நன்கு கலந்து, பின்னர் தாளித்து சாப்பிட்டால், மிகவும் நன்றாக இருக்கும்
புளித்த தயிரை வீணாக்காமல், ஒரு டம்ளர் தயிருக்கு, ஒரு டம்ளர் ரவை, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கொத்துமல்லி இவற்றை சேர்த்து. ஐந்து நிமிடம் ஊற வைத்து, வடை போல் தட்டி எண்ணெயில் சுட்டு, சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
கேழ்வரகு மாவுடன், எள்ளும், சிறிது வெல்லமும் சேர்த்து, அடை செய்து சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு, இது நல்ல பலனை தரும்.
இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கும் பொழுது பொட்டுக்கடலை தேங்காய் சிறிது வறுத்த வேர்க்கடலை இரண்டு பல் பூண்டு உப்பு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
0
Leave a Reply