சிவகாசி பெல் ஹோட்டலில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் ஆற்றல் திறன் கொண்ட வாழ்விடம் என்ற தலைப்பில் கட்டிட அமைப்பாளர்களுக்கான பயிலரங்கம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பெல் ஹோட்டலில் (28.06.2024) தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் ஆற்றல் திறன் கொண்ட வாழ்விடம் என்ற தலைப்பில் கட்டிட அமைப்பாளர்களுக்கான பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த பயிலரங்கத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை எதிர்கொள்ளும் வகையில் கட்டுமானத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் , வடிவமைப்பு மூலமும், மாற்று பொருட்கள், மின் மற்றும் மின்னணு சாதனங்களில் ஆற்றல் திறன் கொண்டவைகளை பயன்படுத்துதல் அதற்கான தொழில்நுட்பங்கள், பசுமை கட்டிடங்கள் பற்றிய அடிப்படை புரிதல், பசுமையை உருவாக்குதன் நன்மைகள் மற்றும் சவால்கள், வளங்கள் பற்றிய விழிப்புணர்வு குறிப்பாக ஆற்றல் திறன் மேம்பாடு மற்றும் பசுமை குடில் வாயு உமிழ்வை குறைப்பது ஆகியவற்றுடன் தொடர்புடைய செயல்களை மேம்படுத்துவதற்கான கட்டடம் கட்டுபவர்கள் மற்றும் கட்டடம் அமைப்பாளர்களுக்கு ஈடுபாட்டை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த பயிலரங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
உலகம் முழுவதும் இன்றைக்கு அதிகமாக நடக்கக்கூடிய ஒரு கலந்துரையாடல் அல்லது விவாதம் பயிலரங்கம் என்று எடுத்துக் கொண்டால் மிக அதிக எண்ணிக்கையில் அது காலநிலை மாற்றம் பற்றியதாக தான் இருக்கிறது. உலகம் முழுவதும் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகப்படியான எண்ணிக்கையிலான உலக பன்னாட்டு கூட்டங்கள் நடைபெறுவதும் காலநிலை மாற்றத்தை பற்றியதாக தான் இருக்கிறது.அடுத்து வரக்கூடிய 100 ஆண்டுகளில் உலகின் 5 விழுக்காடு மக்கள் நேரடியாக இந்த காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று அறிவியல் பூர்வமான தரவுகள் அடிப்படையில் தெரிவிக்கின்றன. நமது ஊர்களிலேயே இதற்கான பாதிப்பினை நேரடியாக நாம் பார்க்க முடிகிறது.
பருவ காலத்தைத் தாண்டி திடீரென்று அதிக மழை பெய்தல், விவசாயத் துறையிலும் கூட வரக்கூடிய புதிய நோய் தாக்குதல்கள், புதுவிதமான பூச்சி தாக்குதல் காலநிலை மாற்றத்தின் உடைய ஒரு தொடர்பாக இருக்கலாம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிவியல் பூர்வமாக கூறுகின்றன.இது போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவானது மிகப்பெரிய அளவில் இருக்கிறது குளிர்சாதன பெட்டி பயன்பாடு குறித்த தரவுகள் மட்டும் எடுத்து நாம் ஆராய்ந்தால் கடற்கரை ஒட்டி இல்லாத நகரங்களில் 200 நாட்கள் ஓடிக்கொண்டிருந்த குளிர்சாதன பெட்டிகள் இன்று 250 நாட்கள் ஓட வேண்டிய சூழல் உள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் உலகத்தை பாதிக்க தொடங்கிவிட்டன. காலநிலை மாற்றத்தினால் கடல் மட்டத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க் மிகப்பெரிய பொருளாதார வலிமை பெற்ற நாடுகள் எல்லாம் அவர்களுடைய மற்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு காலநிலை பருவ மாற்றத்தை பற்றியும், அவர்களை பாதுகாப்பதை பற்றியும் மட்டுமே இருக்கிறது.
இதை எல்லாம் பார்க்கும்போது இன்று நாம் அதிகப்படியாக எல்லோரும் பேச வேண்டிய தலைப்பு, செயல்பட வேண்டிய பகுதியை நாம் குறைவாக பேசப்பட்டு, மிகக் குறைவாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.
இன்று நாம் 80 விழுக்காடு மின் ஆற்றலை புதுப்பிக்க இயலாத சக்தி ஆற்றலின் மூலமே பெறுகிறோம். இந்த ஆற்றலை 20 சதவிகிதம் நம் பயன்பாட்டின் நேரடியான செயல்பாடுகளின் மூலம், குறைக்க முடியும். கட்டிடத் துறையை எடுத்துக்கொண்டால், இயற்கையாகவே சூரிய ஒளி வெளிச்சம் கிடைக்குமாறும், அந்த கட்டிடத்தினுடைய ஜன்னல்கள் இயற்கையாகவே காற்றோட்டம் உள்ளவாறும் பயன்படுத்தும் மின் மற்றும் மின்னணு சாதனங்களில் அதிக ஆற்றல் திறன் கொண்ட சாதனங்களை பயன்படுத்துதல் போன்றவை மூலம் ஆற்றலை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.மேலும், கட்டிடத்துறையில் பசுமை கட்டிட வடிவமைப்பிற்கு பல்வேறு தொழில்நுட்பங்களும், செயற்கை நுண்ணறிவு போன்று துல்லியமாக ஆராய்ந்து செயல்படுவதற்கான தொழில்நுட்பங்களும் உள்ளன. இதனை பல்வேறு நாடுகள் கடைபிடித்து அதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பணிகள் செய்து முன்னேறி வருகின்றன.
பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் இந்த ஆற்றல் திறமைக்கு கட்டுமானங்கள் நிறைய சேர்த்த நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து எல்லாம் நீங்கள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். நிறைய பயிற்சிகளை எடுக்க வேண்டும். அதன் மூலமாக அவற்றை உங்களுடைய நுகர்வோர்களுக்கு நீங்கள் அதை கடத்த வேண்டும் இப்படி செய்வதன் மூலமாகத்தான் நாம் எதிர்காலத்தையும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்ற வேறு முக்கியமான பருவநிலை கால பாதிப்புகளை நாம் சரி செய்ய முடியும்.இதனை நீங்கள் புரிந்து கொண்டு செயல்படுத்தும் போது, உங்களுடைய சமூகத்திற்கும், உங்களுடைய நுகர்வோருக்கும் மிகப்பெரிய பயனாக இருக்கும் அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply