25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஜெய் ரெசிடென்சியில்  (24.02.2026) சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி,  விருதுநகர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, சேலம் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற சிறுதானிய இயக்கம் - விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் குத்துவிளக்குயேற்றி தொடங்கி வைத்தார்.

சிறுதானியங்கள், காலநிலை மாற்றத்திற்கேற்ற பயிராக உலகளவில் அங்கீகரிப்பட்டுள்ளது. இச்சிறுதானியங்கள் இரசாயன உரங்கள் இன்றி, இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் ஏற்றுமதிக்கு உகந்த பயராகவும் உள்ளது.இந்தியாவிலிருந்து சிறுதானியங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிக ஊட்டச்சத்து  காரணமாக, சந்தைகளில் இவற்றின் தேவை பெரிதும் அதிகரித்து வருகின்றது. சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டுதலில் முன்னோடி மாவட்டமாக  விருதுநகர் மாவட்டம் திகழ்கிறது.விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது. சிறுதானிய பயிரிடும் பரப்பளவை அதிகரித்தல், மதிப்புக் கூட்டு மற்றும் தொழில் முனைவோர் உருவாக்கம், விற்பனை மற்றும் சந்தை இணைப்பு ஆகியவை இந்த கருத்தரங்கின் நோக்கமாகும்.

மேலும், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, செயல்விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்தும், தொழில்நுட்பங்கள், இயற்கை முறை உற்பத்தி சான்றிதழ், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படவுள்ளன.எனவே, விவசாயிகள், வணிகர்கள்  வணிகம் செய்வது, மதிப்பிக்கூட்டல், வங்கி கடனுதவிகள், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவைகளை நன்கு அறிந்து கொண்டு பயன் பெற  வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் திரு.ஜீவா அவர்கள் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப சிறு தானியங்கள் ரகங்கள் தேர்வு, உற்பத்தி தொழில்நுட்பங்கள், பயிர் மேலாண்மை, அறுவடை மற்றும் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலைய உணவு அறிவியல் துறை இணை பேராசிரியர் டாக்டர்.நல்லகுறும்பன் அவர்கள் சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும்,மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி உணவு அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் கலைச்செல்வன் அவர்கள் சிறுதானியங்களுக்கான பதப்படுத்துதல் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்தும்,விருதுநகர் மாவட்ட திட்ட மேலாளர் (தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) திரு.பிலிப் மில்டன் அவர்கள் சிறுதானியங்களுக்கான வணிகம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள், பேக்கிங், லேபிளின் தொழில்நுட்பங்கள், FSSAI உரிமம் பெறுதல் மற்றும் ஆன்லைன் யுக்திகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் துணை ஆட்சியர்(அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, மதுரை) திரு.எம்.ரெங்கசாமி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.பா.மோகனதாஸ் சௌமியன், துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) திருமதி செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி அ.அம்சவேணி, தொழில் முனைவோர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News