உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: சிந்துவுக்கு எளிதான முதல் சுற்று.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்பட்ட உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியில் இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து (2016 – வெள்ளி, 2021 – வெண்கலம்), லக்ஷ்யா சென், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி, தனிஷா கிராஸ்டோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நேற்று போட்டிக்கான டிரா வெளியிடப்பட்டது. அதன்படி, பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் சிந்து, அயர்லாந்தின் சோபியா நோபிளை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டியில் சிந்து எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சுற்றில் சீனாவின் வாங் ஜி யியையும், காலிறுதியில் இந்தோனேஷியாவின் புத்ரி குசுமா வர்தானியையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியாவின் மற்றொரு வீராங்கனை உன்னதி ஹூடா, முதல் சுற்றில் மியான்மரின் தெட் ஹ்தார் துஜாரை எதிர்கொள்கிறார்.
0
Leave a Reply