25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S.,அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன்  (18.09.2026) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி இயல்பு நிலையினை தொடர்ந்து செயல்படுத்திட மாதந்தோறும் சட்டம். ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு தேவையான இடங்களில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர் செய்தல், நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மயானப் பாதையினை மறைத்து ஆக்கிரமிப்பு செய்தல், கோவில் இடங்களில் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தி பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல், சமூக நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் தரப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல், தேவையான இடங்களில் பாதுகாப்பு கருதி உயர்கோபுர மின்விளக்குகள் ஏற்படுத்துதல், பேருந்து நிறுத்தம் தொடர்பாக எழும் கருத்து வேறுபாடுகள், இறைவழிபாட்டு தளங்களில் உருவாகும் பிரச்சனைகளுக்கு இருதரப்பினருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எவ்வித பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும். இடையூறுமின்றி பொதுமக்கள் தங்களின் இயல்பு நிலையினை மேற்கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்களின் பாதுகாப்பான சாலை போக்குவரத்தினை உறுதி செய்திடவும், நகரின் முக்கிய வீதிகளில் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி நிறுத்துவதற்கும், சரியான நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தி பொதுமக்களை ஏற்றி செல்லவேண்டும்.

சாலைகளில் வேகத்தடைகள், வாகனத் தடுப்புகள் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தெரியும் வகையில் ஒளிரும் பட்டைகள் அமைத்திட வேண்டும். வாகன விபத்தினை தடுத்திடும் வகையில் ஒளிரும் ஒட்டு வில்லைகளை முக்கிய இடங்களில் அமைத்திடவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்தினை சீர்படுத்திட துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., உதவி ஆணையர் (கலால்) திரு.சோமசுந்தர சீனிவாசன், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News