ஆசிய கோப்பை ஹாக்கி:தென் கொரியாவை வீழ்த்திய இந்திய ஆண்கள் அணி.
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் ஆண்கள் பிரிவில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டிகளில் தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு ‘டிரா’ பதிவு செய்திருந்த இந்திய அணி, நேற்று தனது 3-வது லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் அடித்தனர். ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
பின்னர் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். இறுதியில் இந்திய அணி 7-3 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.
0
Leave a Reply