உலக சிட்டுக்குருவிகள் தினம் காடுகள்தினம் மற்றும் தண்ணீர்தினம்
இராஜபாளையம்ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவிகள் தினம், காடுகள் தினம் மற்றும் தண்ணீர்தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சி பள்ளித்தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில்நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சாத்தூர் டாக்டர் D.அறம்அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பு செய்தார். மாணவர் வெங்கடேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்த முதல்வர் S.கோபாலகிருஷ்ணன் அவர்கள்சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். தாளாளர் திருமதி ஆனந்திஅவர்கள் விருந்தினருக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் நடனம், சேர்ந்திசை பாடல், ஆங்கில உரையாடல்தமிழ் மற்றும் ஆங்கில உரைவீச்சு மற்றும் ஆசிரியர்களின் சேர்ந்திசைபாடல் என கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் தனதுஉரையில் சிட்டுக்குருவிகள் தினம், காடுகள் தினம்மற்றும் தண்ணீர் தினத்தின் இந்தஆண்டு Slogan (முழக்கம்) என்ன என்பதையும் இயற்கையைபாதுகாப்பதன் அவசியத்தையும் மாணவர்களுக்கு அழகாக எடுத்துக் கூறினார். மேலும் உலகம் தோன்றி 500 கோடிகளாகிவிட்டன என்றும் இன்னும் 500 கோடிஆண்டுகள் சூரியன் உயிர்ப்புடன் இருக்கும்என்ற செய்தியையும், அண்டை நாடான சீனாஉருவாக்கி இருக்கும் செயற்கை நிலவு பற்றியும் பல்வேறுதிருக்குறள்களை மேற்கோள் காட்டியும், இயற்கையை போற்றி பாதுகாக்க அவசியத்தையும்அழகாக எடுத்துக் கூறினார். இடையிடையே மாணவர்களுக்கு உலக சிட்டுக் குருவிகள்தினத்தின் இந்த ஆண்டு Slogan என்ன என்று கேட்டதற்கு I Love Sparrows எனவும்காடுகள் தின Slogan காடுகள்மற்றும் நிலையான உற்பத்தி மற்றும்நுகர்வு என்பதையும் தண்ணீர் தினத்தின் Slogan கண்ணுக்குதெரியாத நிலத்தடி நீரை காணக் கூடியதாகமாற்றுதல் என்பதையும் கேள்விகள் மூலம் கேட்டு பதில்கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகமூட்டினார். இறுதியில்மாணவி ஜெயஸ்ரீ நன்றி நவிலவிழா இனிதே நிறைவுற்றது.
0
Leave a Reply