மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி பெற விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வழங்கப்பட உள்ளது. இரண்டு கால் செயலிழந்த மாற்றுத்திறனாளி, மளவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் மூளை முடக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2) விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்: 04562-252068, விருதுநகரில் தொடர்புக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply