இளைஞர் நீதிக் குழும மாணவர் கல்வி பயில ரூ. 24,000/- கல்வி உதவித்தொகை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (14.05.2026) நடைபெற்ற நிகழ்வில், இளைஞர் நீதிக் குழுமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது கல்வியைத் தொடர்வதற்காக, 2026-2027 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை ரூ. 24,000/- க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் மாணவரின் பெற்றோரிடம் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த மாணவர், தான் இளைஞர் நீதிக் குழுமத்தைச் (Juvenile Justice Board - JJB) சார்ந்த இளஞ்சிறார் பிரிவில் உள்ளதாகவும், தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தனது குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதால், மேல்படிப்பைத் தொடர கல்வி உதவித்தொகை வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
அம்மாணவரின் கோரிக்கையை ஏற்று, அவரது கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையாக ரூ. 24,000/- வழங்கப்பட்டது. இதற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவரின் பெற்றோரிடம் நேரில் வழங்கினார். இந்நிகழ்வில், இளைஞர் நீதிக் குழும உறுப்பினர் திருமதி முனியம்மாள், கல்லூரி முதல்வர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply