25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார் (17 ஜூலை 1941 – 10 ஜூன் 2026).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார் (17 ஜூலை 1941 – 10 ஜூன் 2026).

தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களில் இருந்து கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜா (இயற்பெயர்: சின்னசாமி) நேற்று காலமானார். தேனி அல்லிநகரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், இளையராஜா, கங்கை அமரன் ஆகியோரின் நண்பராவார். ஆரம்பத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி, சினிமா ஆசையால் சென்னை வந்து பல போராட்டங்களுக்குப் பிறகு உதவி இயக்குனராக உயர்ந்தார்.

1977-ல் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் இளையராஜா இசையில் இவர் இயக்கிய முதல் படமான '16 வயதினிலே' மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவின் திருப்புமுனையாக அமைந்தது. "என் இனிய தமிழ் மக்களே..." என்ற தனது கம்பீர குரலால் ரசிகர்களை ஈர்த்த இவர், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, 'முதல் மரியாதை', 'கருத்தம்மா' உள்ளிட்ட படங்களுக்காகப் பல தேசிய மற்றும் மாநில விருதுகளையும், கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News